DDT அல்லது டை-குளோரோ-டை-ஃபீனைல்-ட்ரை-குளோரோ-ஈத்தேன் ஆனது 1939 ஆம் ஆண்டில் ஒரு பூச்சிக்கொல்லியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது மிகப் பரந்த அளவிலான பூச்சிகளுக்கு எதிராக சிறந்த செயல்திறனைக் கொண்டு உள்ளது, ஆனால் அதன் நீண்டகாலப் பயன்பாட்டிற்குப் பிறகு இது அம்மண்ணைச் சிதைத்து, அதை வளமிழக்கச் செய்கிறது.
அந்த வளமிழப்புகளை மீளச் செய்வதற்கு என, DDT-மாசுபட்ட மண்ணினை, உயிரியக் கரிமத்துடன் கலக்கும் போது, அது மீண்டும் வளத்தைப் பெற முனைகிறது என்பதை சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பண்புகளில் நிலக்கரியைப் போன்ற இந்த உயிரியக் கரிமம் ஆனது தனது உற்பத்திச் செலவினம் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு ஆகும்.