யுனெஸ்கோ அமைப்பானது, சமீபத்தில் Defending Creative Voices (படைப்புத் திறன் மிக்கவர்களைப் பாதுகாத்தல்) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆயுத மோதல்கள், அரசியல் உறுதித் தன்மை மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப் பட்ட கலைஞர்களுக்குப் பாதுகாப்பினை மிகவும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக் காட்டுகிறது.
2021 ஆம் ஆண்டில், 12 வெவ்வேறு நாடுகளில் 39 கலைஞர்கள் கொல்லப் பட்டதோடு, 24 நாடுகளில் 119 பேர் சிறையில் அடைக்கப் பட்டனர்.
ஒரு வருடத்தில் உலகளவில் 1,200க்கும் மேற்பட்டக் கலைச் சுதந்திர மீறல்கள் பதிவாகி உள்ளன.
கலாச்சார வெளிப்பாடுகளின் பன்முகத் தன்மை பற்றிய உடன்படிக்கையானது 2007 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
152 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன.
இவற்றுள் 27% நாடுகள் மட்டுமே கலைஞர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளன அல்லது அவர்களை ஆதரிக்கின்றன.