2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கையில் DESH – Stack என்ற இணைய தளமானது உருவாக்கப் படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்தார்.
DESH என்பதன் விரிவாக்கம் ‘திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான டிஜிட்டல் சூழல்’ (Digital Ecosystem for Skilling and Livelihood) என்பதாகும்.
இணையவழிப் பயிற்சியின் மூலம் குடிமக்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் அல்லது மறு உருவாக்கம் செய்வதற்கும் வழி வகை செய்வதற்காக இந்தத்தளமானது தொடங்கப்படும்.