கண்டம் விட்டு கண்டம் பாயும் DF-41 எனும் எறிகணையினை பசிபிக் பெருங்கடலில், சீனா வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
இது 12,000 முதல் 15,000 கிலோ மீட்டர் வரையிலான செயல்பாட்டு வரம்பைக் கொண்டு உள்ளது என்பதோடு இது அமெரிக்க நிலப்பகுதியை அடைந்து அதைத் தாக்கும் திறன் கொண்டது.
ஒரு ICBM ஆனது பொதுவாக சுமார் 5,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டது என்பதோடு மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு மே மாதத்தில், DF-5 எனப்படும் சீனாவின் முதல் ICBM எறிகணை என்பது 9,000 கிலோமீட்டர்களுக்கு மேலான வரம்பில் இயங்கியது.