இந்திய அரசின் வர்த்தகத் துறையானது, வைர முன்பண அங்கீகாரம் (DIA) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
உலகளாவிய வைர வர்த்தகத்தில் நாட்டின் நிலையினை வலுப்படுத்துவதே இதன் ஒரு நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பானது, ஏற்றுமதியாளர்களுக்கு, வைரங்களின் இறக்குமதி மற்றும் கையாள்வது தொடர்பான செலவினங்களை எளிமையாக்குவதற்கும், அதனை நன்கு குறைப்பதற்கும் முயல்கிறது.
தற்போது, ஏற்றுமதியாளர்கள் சுங்க வரி ஏதும் செலுத்தாமல் ¼ காரட்டுக்கும் (சுமார் 25 சென்ட்) குறைவான, இயற்கையான வெட்டு வடிவங்களைக் கொண்ட மற்றும் மெருகேற்றம் செய்யப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்யலாம்.
ஏற்றுமதியாளர்கள் இந்த வைரங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன் குறைந்தபட்சம் 10 சதவீத மதிப்புக் கூட்டல் மதிப்பினைச் சேர்க்க வேண்டும்.
இந்த முக்கியத் திட்டமானது இரண்டு நட்சத்திர ஏற்றுமதி நிறுவன அந்தஸ்து (வெளி நாட்டு வர்த்தக இயக்குநரகத்தால் வழங்கப்படுகின்ற அங்கீகாரம்) மற்றும் அதற்கும் மேலான அந்தஸ்து பெற்ற ஆண்டிற்குக் குறைந்தபட்சம் சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியினை மேற்கொள்கின்ற ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கப் பெறும்.