உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மற்றும் கோரக்பூரில் எண்ணிம இந்தியா பொது சேவை மையத் (DICSC) திட்டத்தினை மத்திய அரசானது தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, அந்த மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கிராமப் பஞ்சாயத்துகளிலும் ஒரு மாதிரி DICSC மையத்தை நிறுவும் என்பதோடு நாடு முழுவதும் மொத்தம் 4,740 மையங்கள் நிறுவப்படும்.
இந்த மையங்களின் செயலாக்கம் மற்றும் மையப்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆனது CSC e-Governance Services India Limited என்ற நிறுவனத்தினால் நிர்வகிக்கப் படும்.
இது கிராமப்புறக் குடிமக்களுக்கு நிதி மற்றும் வணிகச் சேவைகளுடன் கூடிய மிகவும் அத்தியாவசிய மின்-ஆளுகைச் சேவைகளை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.