DIKSHA இணைய வாயில் - ஆசிரியர்களுக்கான தேசிய எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு
September 7 , 2017 2670 days 929 0
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் அமைப்பை ஏற்படுத்த தீக்ஷா (DIKSHA) என்ற இணைய வாயிலை ஆரம்பித்துள்ளது.
இது ஆசிரியர்களுக்கான தேசிய டிஜிட்டல் கட்டமைப்பாக செயல்படும். இந்த இணையவாயில் மூலம் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆசிரியர்களும் மேம்பட்ட டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
இது ஆசிரியர்களுக்கு கற்றுக் கொள்ளவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் மதிப்பீட்டுத் தகவல்களுடன் கிடைக்கும். இது ஆசிரியர்களுக்கு பயிற்சி உபகரணங்கள், வகுப்புகளுக்கான தகவல் மூலங்களில், மதிப்பீட்டு உதவிகள், சுயவிவரங்கள் செய்திகள், அறிவிப்புகள் மற்றும் பிற ஆசிரியர்களுடனான தொடர்புகள் ஆகியவற்றில் உதவும்.