மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA - District Development Coordination & Monitoring Committee) இரண்டு ஆண்டுகள் நிறைவை அனுசரிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு 25 ஜூன் முதல் 29 ஜூன் வரை DISHA வாரம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கு ‘DISHA (டிசா) என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரிட்டுள்ளது
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்ந்த்தெடுக்கப்பட்ட மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) இதன் தலைவர் ஆவார்.
மாவட்டத்தில் உள்ள மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் (லோக் சபா) அதன் இணைத் தலைவர்கள் ஆவர்.
DISHA கூட்டத்தைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியதற்காக ஐந்து மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ‘பாராட்டு விருது’ வழங்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட், கேரளா, மிசோரம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை மற்ற 4 மாநிலங்களாகும்.