TNPSC Thervupettagam

DPT3 நோய்த் தடுப்பு மருந்து வழங்கீடு

July 21 , 2023 494 days 247 0
  • இந்தியாவில் தொண்டை அழற்சி நோய், கக்குவான் இருமல் மற்றும் தசை விறைப்பு நோய்களுக்கான தடுப்பு மருந்துகளின் மூன்றாவது தவணையான DPT3 வழங்கீட்டு விகிதமானது 2022 ஆம் ஆண்டில் 93% ஆக உயர்ந்துள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தைய அளவான 91% என்ற அளவினை விஞ்சியது.
  • உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில், DPT3 மருந்திற்கான வழங்கீட்டு விகிதமானது பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தைய அளவான 91% என்ற அளவிற்கு கொண்டு வரப்பட்டது.
  • இது 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 82 சதவீதத்தினை விட அதிகமாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் 86% ஆக இருந்த இப்பகுதியில் பதிவான தட்டம்மைக்கான தடுப்பு மருந்து வழங்கீட்டு விகிதமானது 2022 ஆம் ஆண்டில் 92% ஆக உயர்ந்து, ஆறு சதவீத முன்னேற்றம் பதிவாகியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் DPT3 வழங்கீட்டு விகிதமானது 85% ஆக இருந்தது.
  • இது பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தையக் காலங்களில் பதிவான தடுப்பு மருந்து வழங்கீட்டு விகிதங்களை விஞ்சி, பூடானில் 98% ஆகவும் மாலத்தீவில் 99% ஆகவும் பதிவாகியுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதற்கு அப்பாற்பட்டக் காலத்தில் வழக்கமான நோய்த் தடுப்பு மருந்து வழங்கீட்டில் வங்காளதேசம் 98% மற்றும் தாய்லாந்து 97% நிலைத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • இலங்கை (98%), நேபாளம் (90%) மற்றும் தைமோர்-லெஸ்டே (86%) ஆகியவற்றில் பதிவான தடுப்பு மருந்து வழங்கீடானது முறையே பெருந்தொற்றுக் காலத்திற்கு முந்தையத் தடுப்பு மருந்து வழங்கீட்டிற்கு நெருக்கமான அளவில் முறையே 99%, 93% மற்றும் 90% ஆக இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்