- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பற்ற வைப்பு வளாகமானது புனேவில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (High Energy Materials Research Laboratory - HEMRL) திறக்கப்பட்டுள்ளது.
HEMRL மற்றும் பற்றவைப்பு நிகழ்வு பற்றி
- HEMRL என்பது DRDOன் ஒரு முதன்மையான ஆய்வகமாகும்.
- இது ராக்கெட் & துப்பாக்கி உந்து சக்திகள், வான்வேடிக்கைச் சாதனங்கள், அதிக சப்தத்துடன் வெடிக்கும் அமைப்புகள் மற்றும் உயர் ஆற்றல் மூலக்கூறுகளின் தொகுப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது.
- அக்னி, பிருத்வி, ஆகாஷ், நாக், பினாகா, நீண்ட வரம்பு கொண்ட புவிப்பரப்பிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை போன்றவற்றுக்கான பற்ற வைப்பு அமைப்பு HEMRLல் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.