பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது, தனது நீண்ட தூர தரை வழித் தாக்குதல் ரக சீர்வேக வகையிலான எறிகணையின் (LRLACM) முதல் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
LRLACM ஆனது எளிதில் இடம் விட்டு இடம் கொண்டுச் செல்லக்கூடிய தரைவழி அமைப்புகள் மற்றும் கப்பல்கள் ஆகிய இரண்டிலிருந்தும் நன்கு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
LRLACM ஆனது அதன் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் அதி நவீன வான்பயண மின்னணுவியல் (avionics) மற்றும் மென்பொருள் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.