TNPSC Thervupettagam
November 28 , 2019 1705 days 556 0
  • லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிகல் சங்கமானது (RAeS - Royal Aeronautical Society) 2019 ஆம் ஆண்டிற்கான அச்சங்கத்தின் கெளரவ தோழமை விருதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவரான ஜி. சதீஷ் ரெட்டிக்கு வழங்கியுள்ளது.
  • கடந்த 100 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதலாவது இந்தியர் இவராவார்.
  • இந்தியாவின் முன்னணி இராணுவ அமைப்புகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஏவுகணைத் தொழில்நுட்பங்களுக்கான பங்களிப்புகளுக்காக இவர் அங்கீகரிக்கப்பட்டார்.

இந்த விருது பற்றி

  • இந்தத் தோழமை விருதானது விண்வெளித் துறையில் நோபல் பரிசாகக் கருதப்படுகின்றது.
  • இது உலகின் மிகவும் உயர்ந்த தனித்துவ விருதாகும். விண்வெளித் துறைக்கு மிகவும் சிறப்பானப் பங்களிப்புகளை ஆற்றியோருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • முதலாவது கௌரவத் தோழமை விருதானது 1917 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்