DRIP II திட்டத்தின் கீழ் அணை புனரமைப்பு – தமிழ்நாடு
February 7 , 2025 16 days 92 0
இந்த மாநிலத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஐந்து பெரிய அணைகள், உலக வங்கியின் உதவியுடன் இரண்டாவது அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (DRIP) கீழ் விரைவில் புனரமைக்கப்பட உள்ளன.
அணைப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் கட்டமைப்புகளின் செயல்பாட்டை மிக மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டம் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மிருகந்தாநதி அணை மற்றும் அமராவதி அணை ஆகியவற்றில் புதுப்பித்தல் பணிகளைத் தொடங்குவதற்கு உலக வங்கியின் ஒப்புதலுக்காக இந்தத் துறை காத்திருக்கிறது.
இது வில்லிங்டனில் (கடலூர் மாவட்டம்) அணை புனரமைப்பு திட்டம் மற்றும் மேட்டூர் அணையில் நீர்ப்பிடிப்புப் பகுதி சுத்திகரிப்புப் பணிகளுக்கான திட்டங்களுக்கான முன்மொழிவினையும் உருவாக்கி வருகிறது.
கெலவரப்பள்ளி மற்றும் நீரார் மேல்மட்ட அணை ஆகிய இரண்டு அணைகள் இதில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
1959 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட வைகை அணையானது, இராமநாதபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் குடியிருப்பாளர்களுக்கு பயனளித்தது.
பவானிசாகர் அணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.