TNPSC Thervupettagam

Drought in Numbers 2022 – அறிக்கை

May 14 , 2022 800 days 485 0
  • தற்போது நடைபெற்று வரும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பின் 15வது பங்குதாரர் மாநாட்டில் (CoP15) ‘Drought in Numbers 2022’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்தச் சமீபத்திய மதிப்பீடானது, 196 நாடுகளில் கடந்த 122 ஆண்டுகளில் பதிவான வறட்சிகள் பற்றியும், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான அதன் தாக்கங்கள் பற்றியும் பகுப்பாய்வு செய்தது.
  • 2000 ஆம் ஆண்டிலிருந்து, உலகில் வறட்சிகள் அடிக்கடி ஏற்படும் நிலைகள் மற்றும் அதன் கால அளவு ஆகியவை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • புவியியல் ரீதியாக, இந்தியாவின் வறட்சிப் பாதிப்பு நிலையானது, ஆப்பிரிக்காவின்  துணை சஹாராப் பகுதி நாடுகளுடன் ஒப்பிடப் படுகிறது.
  • கடுமையான வறட்சியின் விளைவானது, 1998 முதல் 2017 வரையிலான 20 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2முதல் 5 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்