அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையானது (DSIR) 1985 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
தொழில்நுட்ப மேம்பாடு, பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் உள்நாட்டுத் தொழில்துறை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதே DSIR துறையின் முதன்மையான பணியாகும்.
வணிக ரீதியாக சாத்தியமான மற்றும் உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) நன்கு ஈடுபடுவதற்கு தொழில்துறைகளை ஊக்குவிப்பதை இந்தத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.