நிதி ஆயோக் அமைப்பின் NITI எல்லைப்புறத் தொழில்நுட்ப நிதி நிறுவனம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி சபை (AICTE) மற்றும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்புடன் (CII) இணைந்து Dx-EDGE முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களில் (MSME) எண்ணிம மாற்றத்தை ஏற்பதற்கான ஒரு தேசிய அளவிலான முன்னெடுப்பு ஆகும்.
Dx-EDGE ஆனது, மிக அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் எண்ணிமத் திறன்களுக்கான அணுகலை வழங்குகிறது.
நாடு முழுவதும் புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டை பொதுமைப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.