E-Daakhil இணைய தளத்தினை நாடு முழுவதும் செயல்படுத்துவதன் மூலம் இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த இயங்கலை வழி நுகர்வோர் குறை தீர்ப்புத் தளம் ஆனது, தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இது 2019 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்டு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
E-Daakhil என்பது நுகர்வோருக்கு இயங்கலை வழியில் பல்வேறு புகார்களைப் பதிவு செய்வதற்காக என்று எவ்வித இடையூறும் இல்லாத, காகிதமில்லாத செயல்முறையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு புதுமையான தளம் ஆகும்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், 1,98,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38,453 ஏற்கனவே தீர்க்கப் பட்டுள்ளதுடன், E-Daakhil இணைய தளத்தில் வெற்றிகரமாக 2,81,024 பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.