மத்திய உள்துறை அமைச்சகமானது (Union Home Ministry) மின்-வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (e-Foreigners Regional Registration Office/e-FRRO) எனும் இணைய அடிப்படையிலான பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வேகமான மற்றும் திறனான இசைவுச்சீட்டு தொடர்பான சேவைகளை (visa-related services ) ஆன்லைனில் வழங்குவதே e-FFRO-வின் நோக்கமாகும்.
வெளிநாட்டினருக்கு இசைவுச் சீட்டு தொடர்பான சேவைகளை விரைவாகவும் திறன்பட்ட முறையிலும் வழங்குவதற்கு மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் இணையதளத்தை (centralised online platform) கட்டமைப்பதே e-FRRO எனும் இணைய அடிப்படையிலான பயன்பாட்டின் நோக்கமாகும்.
தற்போது நடைமுறையில், 180-க்கும் அதிகமான நாட்களைக் கொண்ட இசைவுச் சீட்டு காலத்தில் இந்தியாவில் தங்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலகங்களில் (FROs) தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம், வெளிநாட்டினர் இனி வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் (Foreigners Registration Office- FRO) அல்லது பிராந்திய வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் (Foreigner Regional Registration Office –FRRO) சென்று தங்களை பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை.
e-FRRO திட்டமானது, பிப்ரவரி 12-ஆம் தேதி அன்றிலிருந்து சோதனை அடிப்படையில் நான்கு பிராந்திய வெளிநாட்டினர் பதிவு அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
அவையாவன
பெங்களூரு
டெல்லி
சென்னை
மும்பை
தற்போது முறையாக மேலும் 8 பிராந்திய வெளிநாட்டினர் பதிவு அலுவலகங்களில் e-FRRO திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.