TNPSC Thervupettagam
April 18 , 2018 2416 days 808 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது (Union Home Ministry) மின்-வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (e-Foreigners Regional Registration Office/e-FRRO) எனும் இணைய அடிப்படையிலான பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வேகமான மற்றும் திறனான இசைவுச்சீட்டு தொடர்பான சேவைகளை (visa-related services )  ஆன்லைனில் வழங்குவதே e-FFRO-வின் நோக்கமாகும்.
  • வெளிநாட்டினருக்கு இசைவுச் சீட்டு தொடர்பான சேவைகளை விரைவாகவும் திறன்பட்ட முறையிலும்  வழங்குவதற்கு மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் இணையதளத்தை  (centralised online platform) கட்டமைப்பதே e-FRRO எனும் இணைய அடிப்படையிலான பயன்பாட்டின்  நோக்கமாகும்.
  • தற்போது நடைமுறையில், 180-க்கும் அதிகமான நாட்களைக் கொண்ட இசைவுச் சீட்டு காலத்தில்    இந்தியாவில் தங்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் பதிவு  அலுவலகங்களில் (FROs) தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • இத்திட்டத்தின் மூலம், வெளிநாட்டினர் இனி வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் (Foreigners Registration Office- FRO) அல்லது பிராந்திய வெளிநாட்டினர் பதிவு  அலுவலகம் (Foreigner Regional Registration Office –FRRO)   சென்று தங்களை பதிவு செய்து கொள்ளத் தேவையில்லை.
  • e-FRRO திட்டமானது, பிப்ரவரி 12-ஆம் தேதி அன்றிலிருந்து சோதனை அடிப்படையில் நான்கு பிராந்திய வெளிநாட்டினர் பதிவு அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
  • அவையாவன
    • பெங்களூரு
    • டெல்லி
    • சென்னை
    • மும்பை
  • தற்போது முறையாக மேலும் 8 பிராந்திய வெளிநாட்டினர் பதிவு    அலுவலகங்களில் e-FRRO திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • கொல்கத்தா
    • அமிர்தசரஸ்
    • ஹைதராபாத்
    • கொச்சின்
    • திருவனந்தபுரம்
    • கோழிக்கோடு
    • லக்னோ
    • அகமதாபாத்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்