TNPSC Thervupettagam
April 6 , 2024 233 days 240 0
  • E Ink திரைகள் என்பது அமேசான் கிண்டில் போன்ற இணையவழி வாசிப்பு கருவிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வகை திரை தொழில்நுட்பமாகும்.
  • இந்த தொழில்நுட்பமானது முதன் முதலில் 1990 ஆம் ஆண்டுகளில் மாசசூசெட்ஸ் தொழில் நட்பக் கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு தற்போது E Ink கார்பரேசன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானதாக உள்ளது.
  • நேர் மின்னூட்டம் செய்யப்பட்ட வெள்ளைத் துகள்கள் மற்றும் எதிர் மின்னூட்டம் செய்யப் பட்ட கருப்பு நிறத் துகள்கள் ஆகியவற்றினால் நிரப்பப்பட்ட சிறிய நுண்ணிய குழல்களைப் பயன்படுத்தி இந்தத் திரைகள் செயல்படுகின்றன.
  • இது திரையின் வெவ்வேறுப் பகுதிகளுக்கு நேர் அல்லது எதிர் மின்னூட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம், வெள்ளை அல்லது கருப்பு துகள்கள் மேற்பரப்பில் எழும்பி, திரையில் உரை மற்றும் படங்களை உருவாக்கும்.
  • E Ink திரைகள் காகிதத்தைப் போலவே ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
  • பின்னொளிர்வு தேவையில்லை என்பதால், உருவம் மாறும்போது மட்டுமே ஆற்றலைப் பயன்படுத்துவதால் அவற்றிற்கு மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்