TNPSC Thervupettagam

e-NAM தரவு தளத்தின் ஆறு புதிய பயனாளர் நட்பு அம்சங்கள்

February 23 , 2018 2338 days 723 0
  • மிக அதிகளவில் பயன்பாட்டாளர்களுக்கு உதவிடுவதை நோக்கமாகக் கொண்டு ஆறு பயனாளர் நட்பு அம்சங்களை (User friendly features) வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அவைகளாவன
  1. MIS Dashboard - சிறப்பான பகுப்பாய்வுக்கு
  2. BHIM - வணிகர்கள் பணம் செலுத்துவதற்கான வசதி.
  3. கைபேசி வழியாக வணிகர்களுக்கான பணம் செலுத்தும் வசதி.
  4. மேம்படுத்தப்பட்ட கைபேசி செயலிகள் : Gate entry மற்றும் கைபேசி வழியாக பணம் செலுத்தல்
  5. விவசாயிகளின் தரவுகளை ஒருங்கிணைத்தல்
  6. மின்னணு வழியில் கற்றல் அமைப்பு (e-learning module)
  7. e-NAM இணைய தளமானது தற்போது இந்தி & ஆங்கிலம் ஆகியவற்றுடன் குஜராத்தி, தமிழ், தெலுங்கு, பெங்காளி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் உள்ளது.
  8. e-NAM வணிக வசதியானது (trading facility) 6 மொழிகளில் உள்ளது.
  9. e-NAM ஆனது, Online ஏலத்தின் மூலமாக விவசாயிகளின் விளைபொருட்களுக்கு போட்டிகரமான, லாபகரமான விலையை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  10. தற்போது, இதன் கீழ் 479 மண்டிகள், 14 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் ஆகிய இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்