வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆனது e-NAM இணைய தளத்தின் கீழ் வர்த்தகத்தின் நோக்கெல்லையினை மேலும் நன்கு விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்து உள்ளது.
இந்த முன்னெடுப்பு ஆனது, வேளாண் பொருட்களின் பரவலை அதிகரிப்பதையும், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணிம வர்த்தகத் தளத்திலிருந்து நன்கு பயன் அடைவதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குவதையும் ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் (DMI) ஆனது, 10 கூடுதல் வேளாண் பொருட்களுக்கான வர்த்தகம் மேற்கொள்ளக் கூடிய அளவுருக்களை வகுத்துள்ளது.
DMI ஆனது சுமார் 221 வேளாண் பொருட்களுக்கு வர்த்தகம் மேற்கொள்ளக்கூடிய அளவுருக்களை வகுத்துள்ளதோடு மேலும் 10 பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால் இந்தப் பட்டியலின் எண்ணிக்கை 231 ஆக உயரும்.