TNPSC Thervupettagam
August 3 , 2017 2716 days 1097 0
  • விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக , e-RaKAM என்ற இணைய சேவையை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • அரசாங்கத்துக்குச் சொந்தமான MSTC எனும் ஏல நிறுவனமும், மத்திய தானியக்கிடங்கு நிறுவனமும் (Central Warehousing Corporation) இணைந்து இந்தச் சேவையை செயல்படுத்துகின்றன.
  • இந்தத் திட்டமானது, இந்தியாவின் மிகச் சிறிய கிராமங்களின் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரையும் , உலக அளவிலான வேளாண்மைச் சந்தையுடன் இணைக்க மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி ஆகும். இணையதளம் மற்றும் e-RaKAM மையங்கள் மூலமாக இத்தகைய இணைப்பு சாத்தியம் ஆக்கப்படவுள்ளது .
  • e-RaKAM டிஜிட்டல் முன்முயற்சி மூலமாக விவசாயிகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொது விநியோக நிறுவனங்கள் மற்றும் வேளாண் கொள்முதல் வியாபாரிகளை ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம் விவசாய உற்பத்திகளின் விற்பனை மற்றும் கொள்முதல் முறையினை எளிதாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்