விவசாயப் பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக , e-RaKAM என்ற இணைய சேவையை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான MSTC எனும் ஏல நிறுவனமும், மத்திய தானியக்கிடங்கு நிறுவனமும் (Central Warehousing Corporation) இணைந்து இந்தச் சேவையை செயல்படுத்துகின்றன.
இந்தத் திட்டமானது, இந்தியாவின் மிகச் சிறிய கிராமங்களின் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரையும் , உலக அளவிலான வேளாண்மைச் சந்தையுடன் இணைக்க மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி ஆகும். இணையதளம் மற்றும் e-RaKAM மையங்கள் மூலமாக இத்தகைய இணைப்பு சாத்தியம் ஆக்கப்படவுள்ளது .
e-RaKAM டிஜிட்டல் முன்முயற்சி மூலமாக விவசாயிகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொது விநியோக நிறுவனங்கள் மற்றும் வேளாண் கொள்முதல் வியாபாரிகளை ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம் விவசாய உற்பத்திகளின் விற்பனை மற்றும் கொள்முதல் முறையினை எளிதாக்குகிறது.