TNPSC Thervupettagam
July 10 , 2023 379 days 255 0
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜ்னா- தேசியக் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM) ஆனது e-SARAS என்ற கைபேசிச் செயலியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • சுய உதவிக் குழுக்களில் (SHGs) உள்ள பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்களைச் சிறந்த முறையில் சந்தைப்படுத்த உதவுதல் மற்றும் இணைய வர்த்தக வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • E-SARAS சேவைப் பூர்த்தி மையமானது கிராமப்புற மதிப்புச் சங்கிலிகளின் மேம்பாட்டிற்கான அறக்கட்டளையினால் (FDRVC) நிர்வகிக்கப்படும்.
  • eSARAS இணைய தளம் மற்றும் eSARAS கைபேசிச் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களைச் செயல்முறையாக்கத்திற்கு உட்படுத்த, பின் பொதியாக்கம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு இந்தப் பூர்த்தி மையம் பயன்படுத்தப்படும்.
  • ஒரு இயங்கலையில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளரின் வீட்டிற்குக் கொண்டு வரத் தேவையானத் தளவாடங்களை இது கையாள உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்