கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் e-Shram இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
2014-15 ஆம் ஆண்டில் சுமார் 15.84 கோடி பேர் பதிவு செய்திருந்தனர், ஆனால் 2023-24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 29 கோடியாக உயர்ந்துள்ளது.
e-Shram இணைய தளம் ஆனது, அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கச் செய்வதற்காகவும் அதிகாரமளிப்பதற்காகவும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதிக்குள், e-Shram இணைய தளத்தில் 30,48,02,313 பதிவுகள் பதிவாகியுள்ளன.
எனவே, அமைப்புசாராத தொழிலாளர்களின் உலகின் மிகப்பெரிய தரவுதளமாக இது உருவெடுத்துள்ளது.