இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கணினி மேம்பட்ட மையமானது (C-DAC) மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஆராய்ச்சி முன்னெடுப்புகளின் கீழ் "e-Toycathon 2025" நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
இதில் முதல் பரிசு ஆனது கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு விரிப்பு பலகை விளையாட்டு பொம்மை தயாரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பரிசு ஆனது நொய்டாவில் உள்ள ஜெய்பீ தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு ரோபோ-மென்டர் AI எனும் எந்திரத்திற்காக வழங்கப்பட்டது.
துர்காபூர் தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஊடாடும் வகையிலான கல்வி பயன்பாட்டு விளக்கப்படத்தில் 3வது பரிசினைப் பெற்றுள்ளது.