மின் வர்த்தகத் தளங்களின் மீது E-Tribes இந்தியா பதாகையை (E-Tribes India banners) மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனம் (Tribal Cooperative Marketing Development Federation of India –TRIFED) தொடங்கியுள்ளது.
மேலும் TRIFED நிறுவனமானது பழங்குடியினரின் உற்பத்திப் பொருட்களுடைய சில்லரை வர்த்தகத்திற்கான TRIFED கையேடு ஒன்றையும் (TRIFED’s Handbook for Retail Trade of tribal products), “Tribes Hat” எனும் காலாண்டு இதழ் (Quarterly Magazine) ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனமானது டிஜிட்டல் இந்தியா தொடக்கத்தின் ஒரு பகுதியாக trifed.in, www.tribesindia.com எனும் இரு இணைய தளங்களையும், கைபேசி வர்த்தக செயலியையும் (M-commerce app), சில்லரை சரக்கு மென்பொருள் ஒன்றையும் (Retail Inventory Software) தொடங்கியுள்ளது.
அனைத்துப் பகுதிகளிலும் பழங்குடியினர் தயாரிப்புப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக TRIFED அமைப்பானது அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட், பே-டிஎம், போன்ற பல்வேறு மின்வர்த்தக இணையமேடைகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
மத்தியப் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையினைத் தொடர்ந்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சகமானது அரசு மின்-சந்தையிடத்தில் (Government e-Marketplace - GeM) TRIFED நிறுவனம் மூலம் பழங்குடியின உற்பத்திப் பொருட்களை விற்க முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
TRIFED
இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு நிறுவனமானது மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற ஓர் பன் – மாநில கூட்டுறவுச் சங்கமாகும் (multi-State Cooperative Society) .
இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
TRIFED ஆனது, பன்மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1984-ன் (தற்பொழுது பன்-மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002- Multi-State Cooperative Societies Act, 2002) கீழ் அப்போதைய நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தால் (Ministry of Welfare) ஆகஸ்ட் 1987 அன்று ஏற்படுத்தப்பட்டது.