புது தில்லியில் நடைபெற்ற இந்திய மொழிகளின் தொழில்நுட்ப துறையின் மாநாடான ‘பஷந்த்தரா’-வின் போது டெஸ்க்டாப் மென்பொருளான E-அக்ஷராயனை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்கேன் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட இந்திய மொழிகளின் ஆவணங்களை யுனிகோடு குறியீட்டில் முழுவதும் திருத்தப்படக்கூடிய உரை வடிவில் மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட இலவச டெஸ்க்டாப் மென்பொருள் E-அக்ஷராயன் ஆகும்.
இந்தி, வங்காளம், குர்முகி, தமிழ், கன்னடம் மற்றும் அஸாமி ஆகிய 7 இந்திய மொழிகளில் திருத்தம் செய்ய இந்த மென்பொருள் ஊக்கமளிக்கும்.