ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துப் பொருட்கள் மற்றும் அவை தொடர்பானவற்றிற்கு நிகழ்நேரத்தில் உரிமம் வழங்குவதற்காக மின்னணு முறையிலான ஆஷாதி (e-AUSHADHI) என்ற தளத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் புது தில்லியில் துவக்கி வைத்தார்.
இந்த e-AUSHADHI தளமானது வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், மேம்படுத்தப்பட்ட தகவல் மேலாண்மை வசதி, மேம்படுத்தப்பட்ட தகவல் பயன்பாடு மற்றும் பொறுப்புடைமையை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
இந்தத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படும். மேலும் ஒவ்வொரு நிலையிலும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.