21 ஆம் நூற்றாண்டின் சவால்களை கையாளுவதற்கு மாணவர்களுக்கு திறன் அளிப்பதற்காக மெட்ராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT – Indian Institute of Technology) தொழில்முனைவோர் பிரிவு (E-Cell) ‘E21 பிரச்சாரத்தைத்’ தொடங்கியுள்ளது.
இதன் நோக்கம் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் 150 மாணவர்களின் புதுமைப்புனைவு, படைப்புத்திறன், தொழில் முனைவுத்திறன், தலைமைப் பண்பு மற்றும் சவால்களை எதிர்த்து போராடுதல் ஆகியவற்றின் திறன்கள் மீதான கவனத்தை செலுத்துதல் ஆகும்.