சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு (PSB - Public Sector Banks) மீதான மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் சிறப்புமிகு சேவை 2.0 (EASE - Enhanced Access and Service Excellence) வங்கியியல் சீர்திருத்தங்கள் குறியீடானது வெளியிடப் பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மத்திய நிதித் துறை அமைச்சர் PSBயினால் வீட்டு வாயில்களிலேயே வழங்கப்படும் வங்கிச் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
EASE 1.0 என்ற அறிக்கையானது வாராக் கடன் சொத்துக்களுக்கான தீர்வுகளின் மீது PSBயின் செயல்பாடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வெளிப்படையாகக் காட்டியது.
EASE 2.0 ஆனது EASE 1.0-ன் அடித்தளத்தின் மீது கட்டமைக்கின்றது. இது சீர்திருத்த நடவடிக்கைகளை மாற்ற முடியாததாகவும், செயல்பாடுகள் மற்றும் நிறுவன அமைப்புகளை வலுவானதாகவும் மாற்றிட சிறந்த முடிவுகளை எடுத்துக் காட்டுவதற்காக வேண்டி 6 கருத்துருக்கள் மூலமாக புதிய சீர்திருத்த நடவடிக்கைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.