TNPSC Thervupettagam

EASE 2.0 வங்கியியல் சீர்திருத்தங்கள் குறியீடு

September 15 , 2020 1535 days 720 0
  • சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடு (PSB - Public Sector Banks) மீதான மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் சிறப்புமிகு சேவை  2.0 (EASE - Enhanced Access and Service Excellence) வங்கியியல் சீர்திருத்தங்கள் குறியீடானது வெளியிடப் பட்டுள்ளது.
  • மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மத்திய நிதித் துறை அமைச்சர் PSBயினால் வீட்டு வாயில்களிலேயே வழங்கப்படும் வங்கிச் சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
  • EASE 1.0 என்ற அறிக்கையானது வாராக் கடன் சொத்துக்களுக்கான தீர்வுகளின் மீது PSBயின் செயல்பாடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வெளிப்படையாகக் காட்டியது.
  • EASE 2.0 ஆனது EASE 1.0-ன் அடித்தளத்தின் மீது கட்டமைக்கின்றது. இது சீர்திருத்த நடவடிக்கைகளை மாற்ற முடியாததாகவும், செயல்பாடுகள் மற்றும் நிறுவன அமைப்புகளை வலுவானதாகவும் மாற்றிட சிறந்த முடிவுகளை எடுத்துக் காட்டுவதற்காக வேண்டி 6 கருத்துருக்கள் மூலமாக புதிய சீர்திருத்த நடவடிக்கைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்