மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கியின் (European Bank for Reconstruction and Development-EBRD) 69வது உறுப்பினராக இந்தியா உருவாகியுள்ளது.
சர்வதேச நிதி நிறுவனமான EBRD-ல் இந்தியா உறுப்பினராவதற்கு EBRD-ன் பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
EBRD-ன் 69வது உறுப்பினராக இந்தியா உருவாகியுள்ளதால், இனி EBRD வங்கியின் மேம்பாடு மற்றும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் பிராந்தியங்களில் இந்திய நிறுவனங்களால் கூட்டு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.
2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் EBRD-ல் உறுப்பினராவதற்கு இந்திய அரசு விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவை உறுப்பினராக்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
EBRD
EBRD ஓர் சர்வதேச நிதி நிறுவனமாகும்.
இது 1991ல் தோற்றுவிக்கப்பட்டது.
இதன் தலைமையகம் – இலண்டன்
65 நாடுகளாலும், இரு ஐரோப்பிய யூனியன் நிறுவனங்களாலும் இவ்வங்கி நடத்தப்படுகிறது.
இவ்வங்கியில் அமெரிக்கா பெரும் பங்குதாரராக உள்ளது.
EBRD-ல் ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற கண்டத்தைச் சார்ந்த நாடுகளும் உறுப்பினராக உள்ளன.
அவையாவன:
வட அமெரிக்கா― கனடா, அமெரிக்கா
ஆப்பிரிக்கா ― மொராக்கோ
ஆசியா ― ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா
உறுப்பு நாடுகளில் செயல்படும் தனியார் துறைகளை மேம்படுத்துவதே EBRD வங்கியின் முக்கிய செயல்பாடாகும்.
EBRD வங்கியில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்சம் ஆரம்பகட்ட முதலீடாக ஒரு மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய வேண்டும்.
EBRD வங்கியும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியும் (European Investment Bank - EIB) ஒன்றல்ல, வெவ்வேறானவை.
முழுவதும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களால் ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக நடத்தப்படுகிறது.