TNPSC Thervupettagam
March 10 , 2018 2454 days 736 0
  • மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கியின் (European Bank for Reconstruction and Development-EBRD) 69வது உறுப்பினராக இந்தியா உருவாகியுள்ளது.
  • சர்வதேச நிதி நிறுவனமான EBRD-ல் இந்தியா உறுப்பினராவதற்கு EBRD-ன் பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
  • EBRD-ன் 69வது உறுப்பினராக இந்தியா உருவாகியுள்ளதால், இனி EBRD வங்கியின் மேம்பாடு மற்றும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் பிராந்தியங்களில் இந்திய நிறுவனங்களால் கூட்டு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.
  • 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் EBRD-ல் உறுப்பினராவதற்கு இந்திய அரசு விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவை உறுப்பினராக்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

EBRD

  • EBRD ஓர் சர்வதேச நிதி நிறுவனமாகும்.
  • இது 1991ல் தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் – இலண்டன்
  • 65 நாடுகளாலும், இரு ஐரோப்பிய யூனியன் நிறுவனங்களாலும் இவ்வங்கி நடத்தப்படுகிறது.
  • இவ்வங்கியில் அமெரிக்கா பெரும் பங்குதாரராக உள்ளது.
  • EBRD-ல் ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற கண்டத்தைச் சார்ந்த நாடுகளும் உறுப்பினராக உள்ளன.
  • அவையாவன:
    • வட அமெரிக்கா― கனடா, அமெரிக்கா
    • ஆப்பிரிக்கா  ― மொராக்கோ
    • ஆசியா      ―  ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா
  • உறுப்பு நாடுகளில் செயல்படும் தனியார் துறைகளை மேம்படுத்துவதே EBRD வங்கியின் முக்கிய செயல்பாடாகும்.
  • EBRD வங்கியில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்சம் ஆரம்பகட்ட முதலீடாக ஒரு மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய வேண்டும்.
  • EBRD வங்கியும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியும் (European Investment Bank - EIB) ஒன்றல்ல, வெவ்வேறானவை.
  • முழுவதும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களால் ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்