சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்காக அவசரகால கடன் தொடர் உறுதித் திட்டத்திற்கு (ECLGS - Emergency Credit Line Guarantee Scheme) மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பமுள்ள முத்ரா கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்கு ரூ.3 இலட்சம் கோடி அளவிலான கூடுதல் கடனிற்காக 100% கடன் உத்தரவாதமானது தேசியக் கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கப் படுகின்றது.