வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) ஆனது, நன்கு மேம்படுத்தப்பட்ட பூர்வாங்க / தோற்றச் சான்றிதழ் (eCoO) 2.0 அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஏற்றுமதியாளர்களுக்கான சான்றிதழ் செயல்முறையை மிக எளிதாக்குவதற்கும் வர்த்தக செயல்திறனை மேம்படுத்துவதற்கும் என வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிடத் தக்க மேம்படுத்தல் அம்சம் ஆகும்.
இந்த மேம்படுத்தப்பட்ட தளம் ஆனது, பல பயனர் அணுகல் போன்ற பயனர்களுக்கு ஏதுவான பல அம்சங்களை கொண்டுள்ளது என்பதோடு இது ஏற்றுமதியாளர்கள் ஒரு இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீட்டின் (IEC) கீழ் பல பயனர்களை அங்கீகரிக்க உதவுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல், ஒரு முன்னுரிமை சாராதப் பூர்வாங்கச் சான்றிதழ்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வது என்பது eCoO 2.0 தளம் வழியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பூர்வாங்கச் சான்றிதழ்கள் (CoO) என்பவை ஏற்றுமதி செய்யப்பட்டப் பொருட்களின் தோற்றுருவினை அங்கீகரிக்கிறது.