TNPSC Thervupettagam

EFTA ஒப்பந்த நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தம்

March 12 , 2024 129 days 207 0
  • இந்திய அரசானது புது டெல்லியில் நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய தடையற்ற வர்த்தகச் சங்கத்துடன் (EFTA) தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நான்கு நாடுகள் ஆனது EFTA சங்கத்தின் உறுப்பினர் நாடுகள் ஆகும்.
  • இந்த ஒப்பந்தமானது இனிமேல் அதிகாரப்பூர்வமாக வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) என அழைக்கப்படுகிறது.
  • அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் கையொப்பமாவதற்கு முன்னதாக, அந்த ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப் பட்ட முதல் 10 ஆண்டுகளில் சுமார் 50 பில்லியன் டாலர் முதலீட்டினை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டினை இந்தியா கோரியது.
  • இந்த சங்கத்தின் உறுப்பினர் நாடுகளிடமிருந்து அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 பில்லியன் டாலர் முதலீடு கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்