கல்வி சார் நிதிக் கண்காணிப்பு (EFW) அமைப்பின் 2023 ஆம் ஆண்டு அறிக்கையானது, 2021 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்து ஆண்டுகளில் கல்விச் செலவினங்களின் போக்குகள் மற்றும் முறைகள் பற்றிய முக்கியப் பகுப்பாய்வுத் தகவல்களை வெளிக் கொணர்கிறது.
இது பள்ளி வயது மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து, தேர்ந்தெடுக்கப் பட்ட நாடுகளுக்கு அடுத்து வரவிருக்கும் பத்து ஆண்டுகளுக்கு அதன் நிதி சார் தாக்கங்களைக் கணிக்கிறது.
பெருந்தொற்றின் தொடக்கத்தில், மொத்த உலகளாவிய கல்விச் செலவினம் தேக்கம் அடைந்தது, ஆனால் அது 2021 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகரித்தது.
அனைத்து நாட்டின் வருமானக் குழுக்களிலும் அரசாங்க நிதி வளங்கள் தான் முக்கிய கல்வி நிதி ஆதாரமாக உள்ளது.
வீட்டுச் செலவினமானது பெரும்பாலும் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் அதிகம் மேற்கொள்ளப் படுகிறது.