TNPSC Thervupettagam

EIU உலகின் வாழத் தகுந்த சிறந்த நகரங்கள் குறியீடு 2023

June 26 , 2023 518 days 423 0
  • ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா நகரமானது, 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் "மிகவும் வாழத் தகுந்த நகரம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனும், இந்தப் பட்டியலில் தனது இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து இதில் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய இரண்டு ஆஸ்திரேலிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • பொருளாதாரத் தகவல் வழங்கீட்டு மையம் (EIU) என்ற அமைப்பானது இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவினைச் சேர்ந்த புது டெல்லி மற்றும் மும்பை ஆகியவை 141வது இடத்திலும், சென்னை 144வது இடத்திலும் உள்ளன.
  • அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகியவை முறையே 147 மற்றும் 148வது இடத்தில் இதில் உள்ளன.
  • சிரியாவின் டமாஸ்கஸ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தக் குறியீட்டில் மக்கள் வாழ மிக மோசமான சூழல் கொண்ட நகரமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்