TNPSC Thervupettagam

EIU நிறுவனத்தின் வாழ்க்கைச் செலவினக் குறியீடு 2022

December 12 , 2022 584 days 373 0
  • இலண்டனை சேர்ந்த பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு நிறுவனமானது (EIU) 2022 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைச் செலவின அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இது உலகம் முழுவதும் உள்ள 172 நாடுகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒப்பிடுகிறது.
  • அதிக வருமானம் மற்றும் வலுவான அமெரிக்க டாலர் மதிப்பு காரணமாக நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து இக்குறியீட்டில் முதலிடத்தைப் பெற்று உள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த டெல் அவிவ் இந்த ஆண்டு 3வது இடத்திற்குச் சரிந்தது.
  • லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் 4வது இடத்தினைப் பெற்றுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில் 72வது இடத்திலிருந்த மாஸ்கோவின் தரவரிசையானது 2022 ஆம் ஆண்டில் 37வது இடத்திற்கு உயர்ந்தது.
  • உக்ரைனின் தலைநகரமான கியேவ் 2022 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற வில்லை.
  • இஸ்தான்புல், பியூனஸ் அயர்ஸ் மற்றும் டெஹ்ரான் ஆகிய நகரங்களில் பண வீக்கத்தில் அதிக உயர்வானது பதிவாகியுள்ளது.
  • பணவீக்கத்தின் அதிகபட்ச விகிதம் ஆனது, கடந்த ஆண்டில் வாழ்க்கைச் செலவினம் 132 சதவீதம் வரை அதிகரித்த கராகஸ் நகரில் (வெனிசுலா) பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்