EIU நிறுவனத்தின் வாழ்க்கைச் செலவினக் குறியீடு 2022
December 12 , 2022 712 days 438 0
இலண்டனை சேர்ந்த பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு நிறுவனமானது (EIU) 2022 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைச் செலவின அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
இது உலகம் முழுவதும் உள்ள 172 நாடுகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒப்பிடுகிறது.
அதிக வருமானம் மற்றும் வலுவான அமெரிக்க டாலர் மதிப்பு காரணமாக நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து இக்குறியீட்டில் முதலிடத்தைப் பெற்று உள்ளன.
2021 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த டெல் அவிவ் இந்த ஆண்டு 3வது இடத்திற்குச் சரிந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் 4வது இடத்தினைப் பெற்றுள்ளன.
2021 ஆம் ஆண்டில் 72வது இடத்திலிருந்த மாஸ்கோவின் தரவரிசையானது 2022 ஆம் ஆண்டில் 37வது இடத்திற்கு உயர்ந்தது.
உக்ரைனின் தலைநகரமான கியேவ் 2022 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற வில்லை.
இஸ்தான்புல், பியூனஸ் அயர்ஸ் மற்றும் டெஹ்ரான் ஆகிய நகரங்களில் பண வீக்கத்தில் அதிக உயர்வானது பதிவாகியுள்ளது.
பணவீக்கத்தின் அதிகபட்ச விகிதம் ஆனது, கடந்த ஆண்டில் வாழ்க்கைச் செலவினம் 132 சதவீதம் வரை அதிகரித்த கராகஸ் நகரில் (வெனிசுலா) பதிவு செய்யப்பட்டுள்ளது.