வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 53வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இதைப் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வுப் பிரிவு (EIU - Economist Intelligence Unit) வெளியிட்டுள்ளது.
இது 167 நாடுகளை ஆய்வு செய்தது.
இது 23 நாடுகளை முழு ஜனநாயக நாடுகளாகவும், 52 நாடுகளை ஜனநாயகம் குன்றி வரும் நாடுகளாகவும், 35 நாடுகளை கலப்பு ஜனநாயக நாடுகளாகவும், 57 நாடுகளை சர்வாதிகார நாடுகளாகவும் வகைப்படுத்தியுள்ளது .
2014 ஆம் ஆண்டின் தரவரிசையில் 27வது இடத்தில் இருந்து இந்தியா தற்போது தரவரிசையில் சரிந்து வந்துள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் ஜனநாயகம் குன்றி வரும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.