TNPSC Thervupettagam
December 8 , 2024 15 days 85 0
  • உலக வங்கியானது, அதன் நிலப்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீதான மேலாண்மையினை மேம்படுத்துதல் (ELEMENT) திட்டத்தின் கீழ் 225.5 மில்லியன் டாலர் நிதியினை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • திரிபுரா மற்றும் நாகாலாந்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் வன நிலப் பரப்புகளைச் சிறப்பாக மேலாண்மை செய்தல் மற்றும் வனம் சார்ந்த மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இரு மாநிலங்களிலும் உள்ள வன நிலப்பரப்புகளை மிகவும் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கும், வனம் சார் மதிப்பு சங்கிலியை மேம்படுத்தவும் 700,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த திட்டம் உதவும்.
  • இது தனியார் துறையுடன் இணைந்து அகர் மரம், மூங்கில் மற்றும் தேன் போன்ற காடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் பல்வேறு பொருட்களின் மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதன்  மூலம் வனங்களைச் சார்ந்திருக்கும் பல்வேறு சமூகங்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்