TNPSC Thervupettagam

EmpowHER Biz முன்னெடுப்பு

January 18 , 2025 35 days 99 0
  • சமீபத்தில், சில்லறை விற்பனை தொழில் துறையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக வேண்டி EmpowHER Biz - சப்னோ கி உதான் எனும் ஒரு முன்னெடுப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், சுமார் 18 முதல் 35 வயதுடைய ஐம்பது பங்கேற்பாளர்கள், குறிப்பிட்ட அளவுருக்களின் அடிப்படையில் இயங்கலை விண்ணப்பச் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இந்தப் பங்கேற்பாளர்களில் முதல் இருபது பேர் புதியக் கடை உரிமையாளர் மீதான கட்டணத்தில் 100% தள்ளுபடி பெறுவார்கள்.
  • டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம், பஞ்சாப், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த பெண்களுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • அதிக நெருக்கடி மிக்க பகுதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் எரிவாயு நிலையங்களில் அமைந்துள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு சில்லறை விற்பனைக் கடைகளின் வலையமைப்பை இது கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்