PM E-DRIVE என்ற திட்டமானது மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை (EVs) நன்கு ஊக்குவிப்பதற்காகவும், மின்னேற்ற உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டம் ஆனது நாட்டின் மின்சார வாகனப் போக்குவரத்தினை நோக்கிய மாற்றத்தினை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM E-DRIVE திட்டமானது, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வாகன இலக்குகளை புதிய கட்டமைப்பில் இணைத்து, நடப்பில் உள்ள 2024 ஆம் ஆண்டு மின்சார வாகனப் போக்குவரத்து ஊக்குவிப்புத் திட்டத்துடன் (EMPS) ஒருங்கிணைக்கப்பட உள்ளது.