TNPSC Thervupettagam
March 9 , 2023 632 days 316 0
  • உலக வானிலை ஆய்வு அமைப்பு (WMO) வெளியிட்ட புதியத் தகவல்களின் படி, இனி வர உள்ள மாதங்களில் ஒரு வெப்பமயமான எல் நினோ நிகழ்வு உருவாகலாம் என கூறப் படுகிறது.
  • எல் நினோ நிகழ்வு ஆனது வழக்கத்திற்கு மாறான ஒரு கட்டுக்கடங்காத மற்றும் நீடித்த லா நினா நிகழ்வின் ஒரு தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகச் செய்யலாம்.
  • இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு போன்ற அம்சங்களைப் பாதிக்கும்.
  • எல் நினோ மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஆனது தற்போது வெப்பமான ஆண்டாக உள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது ஓர் ஆண்டாவது வெப்பமிக்க ஆண்டாக மாற 93% வாய்ப்பு உள்ளது.
  • தற்போதைய லா நினா நிகழ்வானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கி 2021 ஆம் ஆண்டு போரியல் கோடை என்ற ஒரு நிகழ்வின் போதான ஒரு சிறிய இடைவெளியுடன் நிகழ்ந்து வருகிறது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல் நினோ நிகழ்வு போன்றே லா நினா நிகழ்வும் வானிலை மற்றும் பருவநிலையில் எதிர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • லா நினா என்ற நிகழ்வானது, ஆப்பிரிக்காவின் கிரேட்டர் ஹார்ன் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் நீடித்த வறட்சி மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சராசரி மழைப் பொழிவிற்கும் அதிகமான மழைப் பொழிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்