மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ENSURE - தேசிய கால்நடைத் திட்டம் - EDEG (Entrepreneurship Development and Employment Generation) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி எனப்படும் நபார்டு வங்கியால் (NABARD - National Bank for Agriculture and Rural Development) மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது விலங்குகள் நலம், பால் வளம் மற்றும் மீன்பிடித் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
கோழி வளர்ப்பு, சிறு விலங்குகள் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்றவற்றிற்கான மானியத் தொகையானது நேரடி மானியத் திட்டத்தின் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
தேசிய கால்நடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது “தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்” என்று அழைக்கப்படும்.
நேரடி மானியத் திட்டத்தின் நடைமுறையை மேம்பட்ட, எளிதான மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக ஏற்படுத்துவதற்கு “ENSURE” என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.