TNPSC Thervupettagam

ENSURE - தேசிய கால்நடைத் திட்டம் - EDEG தளம்

December 17 , 2018 2042 days 528 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ENSURE - தேசிய கால்நடைத் திட்டம் - EDEG (Entrepreneurship Development and Employment Generation) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி எனப்படும் நபார்டு வங்கியால் (NABARD - National Bank for Agriculture and Rural Development) மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது விலங்குகள் நலம், பால் வளம் மற்றும் மீன்பிடித் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
  • கோழி வளர்ப்பு, சிறு விலங்குகள் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு போன்றவற்றிற்கான மானியத் தொகையானது நேரடி மானியத் திட்டத்தின் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
  • தேசிய கால்நடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகையானது “தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்” என்று அழைக்கப்படும்.
  • நேரடி மானியத் திட்டத்தின் நடைமுறையை மேம்பட்ட, எளிதான மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக ஏற்படுத்துவதற்கு “ENSURE” என்ற தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்