தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) ஆனது, 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள அதன் சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் பல முக்கியப் புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.
இந்தப் புதுப்பிக்கப்பட்ட செயல்முறையானது, எளிதாகக் கையாளுவதற்கு என அதன் உறுப்பினர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்துகிறது:
ஆதார் எண்ணின் அடிப்படையிலான பொதுக் கணக்கு எண்களை (UAN) கொண்ட உறுப்பினர்கள் (2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு): கோரிக்கைகள் இயங்கலையில் செயல்படுத்தப்படும்.
ஆதார் மூலம் சரி பார்க்கப்பட்ட UAN எண்களைக் கொண்ட உறுப்பினர்கள் (2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்): கோரிக்கைகள் இயங்கலையிலும் நேரிலும் செயல்படுத்தப்படும்.
ஆதார் எண்ணின் மூலம் சரிபார்க்கப்பட்ட UAN எண் இல்லாத உறுப்பினர்கள் அல்லது உயிரிழந்த உறுப்பினர்கள்: கோரிக்கைகள் நேரடியாகச் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.
இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர், விரைவில் கூடுதல் சரிபார்ப்பிற்கான அவசியம் இன்றி இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியப் பணத்தைப் பெற முடியும்.
EPFO உறுப்பினர்கள், விரைவில் தங்கள் வருங்கால வைப்பு நிதியை தானியங்கி பண இயந்திரங்கள் மூலம் தங்கள் பணத்தைப் பெற முடியும்.
EPFO அதன் உறுப்பினர்களுக்கு பரிவர்த்தனை வர்த்தக நிதியங்களுக்கு (ETF) அப்பால், நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதற்கான விருப்பத் தேர்வினை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
சமீபத்திய தரவுகள் ஆனது, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1.34 மில்லியன் எண்ணிக்கையிலான புதிய EPFO உறுப்பினர்கள் என்ற ஒரு எண்ணிக்கையுடன் கடந்த ஐந்து மாதங்களில் மிகக் குறைந்த பதிவுடன், முறை சார் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைந்துள்ளதாக எடுத்துக் காட்டுகிறது.